
தமிழ்நாட்டில் அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள்,தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை ஆவின் நிறுவனம் ஏற்க மறுப்பதால் அநேக உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு பால் கொள்முதல் ஒப்புதலை வழங்கி வருகின்றனர். இதனால் சென்னையில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆவின் பால் பண்ணைக்கு வரத்து குறைந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் பால் பதப்படுத்தும் தொழில் மிகவும் தாமதமாகி வருகிறது. எனவே மத்திய மற்றும் தென் சென்னையின் பல பகுதிகளிலும் பால் விநியோகம் செய்ய தாமதமாகியதால் நுகர்வோர்கள் பலரும் கூடுதலாக விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை பெற்றனர். மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் நுகர்வோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீச்சல் குளத்தில் நடந்த ரிஷப் பண்ட்…, உடல்நிலை குறித்து வெளியிட்ட நீயூ அப்டேட்!!
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி கூறுகையில், “தென்சென்னையில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நுகர்வோர், சில்லறை வணிக வளாகங்களில் அதிகாலை 3 மணிக்கு வர வேண்டிய பால் வண்டி காலை 8 மணி அளவிலே வந்து சேர்ந்தது. தற்போது இந்த நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் நாளை முதல் பால் விநியோகம் வழக்கம்போல் செயல்படும். அதேபோல் பால் உற்பத்தியாளர்களிடம் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் பால் பற்றாக்குறை எதுவும் இல்லை.” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.