டோக்கியோ பாரா ஒலிம்பிக் – T64 உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமார்!!

0

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

முன்னேற்றத்தில் இந்தியா:

கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோ நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை இந்திய வீரர், வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக,  தேவேந்திரா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர்  ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வாங்கி சிறப்பு செய்தனர்.

இதோடு சேர்த்து, 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். மேலும் நமது தமிழகத்தை சேர்ந்த வீரரான மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


இந்நிலையில் புதிதாக, ஆடவருக்கான T64 உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 18 வயது நிரம்பிய பிரவீன்குமார் 2.07 மீ உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.  இந்த மூன்று பதக்கங்களையும் சேர்த்து இந்தியா மொத்தம் 11 பதங்கங்கங்களை தனதாக்கி பதக்கப்பட்டியலில் 36 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here