கொரோனா கோர ஆட்டம்.. ஒரே நாளில் 45 ஆயிரத்தை கடந்த தொற்று பாதிப்பு.. 366 பேர் பலி!!

0
இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 366 பேர் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா இரண்டாம் அலை ஏப்ரல் மாதத்தில் உச்ச நிலையை அடைந்தது. பின்னர் தடுப்பூசி தீவிரமாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாலும் மற்றும் தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும் இந்த தொற்றின் வேகம் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே குறையத்தொடங்கியது.
இதனால் பழையபடி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தபடி மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது. ஆராய்ச்சியாளர்கள் செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாம் அலை உச்சம் தொடும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேர விவரங்களின் படி, இந்தியாவில் புதிதாக தொற்று எண்ணிக்கை 45,352 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 366 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தற்போது வரை தொற்று எண்ணிக்கை 32.9 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,39,895 ஆக உயர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here