இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு ஆகாது.., முல்லையை எதிர்த்துப் பேசும் ஐஸ்வர்யா.., ஆத்திரமடைந்த மூர்த்தி!!!

0
இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு ஆகாது.., முல்லையை எதிர்த்துப் பேசும் ஐஸ்வர்யா.., ஆத்திரமடைந்த மூர்த்தி!!!
இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு ஆகாது.., முல்லையை எதிர்த்துப் பேசும் ஐஸ்வர்யா.., ஆத்திரமடைந்த மூர்த்தி!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கஸ்தூரி வட்டிக்கு பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பல்வேறு ரூல்ஸ் களை போடுகிறார். அந்த நேரத்தில் முல்லை வர அவரிடம் வட்டிக்கு வாங்குன பண விஷயத்தை சொல்ல கூடாது என்கிறார். பின் முல்லை செலவுக்கு என்ன செய்றீங்க என்று கேட்க கஸ்தூரி ஏதோ சொல்லி மழுப்புகிறார். அடுத்ததாக கண்ணன் கதிரை பார்க்க ஹோட்டலுக்கு வர அங்கு அவர் இல்லாததால் முல்லையின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவாவும் அங்கு வர அனைவரும் பேச வளைகாப்பு வேலை எப்படி போகுது என ஜீவா விசாரிக்கிறார். பின் அவரிடம் கயல், மீனாவை பற்றி விசாரிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக கண்ணனிடம் பணம் இருக்கிறதா என்று கேட்க வச்சிருக்கேன் என்று சொல்கிறார். பின் இருவரும் சந்தோசமாக இருந்த நாளை நினைத்து வருத்தப்பட, இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர். இந்த பக்கம் தனம் முல்லை கண்ணனை நினைத்து வருத்தப்பட அந்த நேரத்தில் மூர்த்தி வர தனத்தை நக்கலடிக்கிறார். பின் முல்லையின் அப்பாவும் வர கடை சாவியை கொடுத்து விட்டு கிளம்பும் போது கண்ணன், ஜீவா வந்ததை சொல்கின்றனர். இதை நினைத்து மூர்த்தி வருத்தப்படுகிறார்.

அடுத்ததாக வளைகாப்புக்கு செல்வதை பற்றி தனம் பேச மூர்த்தி பிடிகொடுக்காமல் அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் ஜீவா, மீனாவும் பேச அப்போது ஐஷு வளைக்கப்புக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று சொல்கிறார். மீனா பணம் இருக்கா என்று கேட்க பணம் இருக்கு ஆனா அதை எடுக்கலாமான்னு தெரியல என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here