கண்ணனால் தனத்தை வீட்டை விட்டு போக சொல்லும் மூர்த்தி…!கோபத்தில் அண்ணனை திட்டும் கதிர்!!!

0

விஜய் டிவியில் மக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இன்றைய கதையாக, கண்ணனை பற்றி மூர்த்தியிடம் தனம் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் மிகுந்த கோபமடையும் மூர்த்தி, அவ்வளவு அக்கறை இருந்தால் கண்ணனின் வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார். மேலும் இதை கேட்ட கதிர் கோபத்தில் மூர்த்தியை திட்டுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு ஏற்பட்ட பொய் பிரசவ வலி  குறித்து மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் குடும்பம் முழுவதும் பேசி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று, பிறக்கப்போகும் குழந்தைக்கு  தேவையான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு வழக்கம் போல குதர்க்கமாக பேசுகிறார் மீனா.

இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் தங்களிடம் இருக்கும் பொருட்கள் கொண்டு சமையல் செய்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் கண்ணனுக்கு, அண்ணன் மற்றும் அண்ணியுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்து சாப்பிடும் நினைவு வர அதை பற்றி மிகுந்த வருத்தத்துடன் கண்கலங்கியபடி ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுகிறார்.

இதையடுத்து ஜீவா மற்றும் மீனா தனத்திற்கு பிறக்க உள்ள குழந்தை பற்றி சந்தோசப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஜீவா, தன் அண்ணன் குழந்தைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கூற அதற்கு மீனா பிறக்க போற குழந்தையை  பற்றி இவ்வளவு யோசிக்கிற, நம்ம குழந்தை பற்றி இப்படி எதாவது யோசிக்கியா? என கேட்கிறார். அதற்கு ஜீவா, அதுக்கு தான் அண்ணன் மற்றும் அண்ணி இருக்காங்க நம்ம எதுக்கு அதை யோசிக்கணும் என கூறுகிறார்.

அதன் பின்னர் மீனாவை வேற ஒரு ரூமுக்கு அழைத்து செல்லும் ஜீவா, அங்கு இருக்கும் அலமாரியைத் திறந்து கயல் என பெயரிடப்பட்ட உண்டியலை காண்பிக்கிறார். மேலும் இந்த உண்டியலில் தான், அண்ணி தனம் கயலுக்காக  பணம் சேர்த்து வைத்து வருவதாக கூறுகிறார். மேலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இதில் பணம் போட தவறுவதில்லை என சொல்கிறார். அதற்கு ஆச்சரியப்படும் மீனா காமெடியாக பேசுகிறார்.

அதன் பின்னர் தனம், மூர்த்தியிடம் கண்ணன் பற்றி வியப்புடன் கூறுகிறார். அதாவது கண்ணன் எவ்வளவு பொறுப்பாக மாறி உள்ளார் என ஆச்சரியத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு மிகுந்த ஆவேசத்துடன் தனத்தை திட்டுகிறார் மூர்த்தி. இந்த சத்தம் கேட்டு வெளியே வருகின்றனர் கதிர் மற்றும் முல்லை. இந்நிலையில் கதிர், மூர்த்தியிடம் எதற்கு அண்ணியை திட்டுனீங்க என்று கேட்கிறார்.

அதற்கு மூர்த்தி, எப்பொழுது பார்த்தாலும் கண்ணனை பற்றிய பேசிட்டு இருந்தால் கோபம் வராதா? என கேட்கிறார். மேலும் கண்ணன் மீது அவ்வளவு பாசம் இருந்தால் கண்ணனின்  வீட்டிற்கு செல்லுமாறு தனத்தை சரமாரியாக திட்டுகிறார் மூர்த்தி. இதை கேட்ட கதிர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பேசாமல் போய் தூங்க வேண்டியது தானே எதற்கு அண்ணியை திட்ட வேண்டும் என கேட்கிறார். இவ்வாறு இன்றைய கதைக்களம் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here