நான் தான் லட்சுமியின் அம்மா…உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா…!ஆவேசத்தில் பொங்கும் பாரதி!!!

0

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு எப்பொழுதும் முதன்மை வகிக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்று, லட்சுமி தன்னுடைய குழந்தை தான் என்பதை பாரதியிடம் கூறுகிறார் கண்ணம்மா. கடும் கோபத்தில் சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் பல கேள்விகளை கேட்கிறார் பாரதி.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவை பாரதி வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அப்பொழுது பாரதி கண்டதையும் பேசி கண்ணம்மாவை வம்புக்கு இழுக்கிறார். இதனையடுத்து இன்று, லட்சுமியை அனுப்பிவைக்குமாறு பாரதியிடம் கண்ணம்மா கேட்க அதற்கு பாரதி லக்ஷ்மியின் அம்மா, அப்பா வந்ததும் அவங்க கூட லக்ஷ்மியை அனுப்புகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

அந்த வேளையில் பாரதியை சொடக்கிட்டு அழைக்கும் கண்ணம்மா லக்ஷ்மியை என்னுடன் அனுப்பிவைக்குமாறு கோபத்துடன் கேட்க அதற்கு மீண்டும் பாரதி லட்சுமியின் அம்மாவை கூப்பிட்டு வர சொல்கிறார். இந்நிலையில், நான் தான் லட்சுமியின் அம்மா என்ற உண்மையை கோவத்துடன் போட்டு உடைத்து விடுகிறார் கண்ணம்மா. அதன் பின்னர் லட்சுமி பற்றிய உண்மை தெரிந்த பாரதி, கண்ணம்மாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

மேலும் ஹேமாவை என்னை விட்டு பிரிய பல செயல்களை செய்தாய், அதோடு மட்டுமல்லாமல் லட்சுமியை என்கிட்ட நெருக்கமாக பழக செய்தாய் என சரமாரியாக கண்ணம்மாவை பேசுகிறார். மேலும் நீ சொன்ன இந்த பொய்க்கு ஒட்டுமொத்த என்னுடைய குடும்பமும் உதவி செய்கிறது என்று கூறி ஆவேசப்படுகிறார். மேலும் நீ பெத்த பொண்ணையே வேற ஒருத்தவங்க பொண்ணு சொல்றியே உனக்கு வெட்கமாக இல்லையா?என தாறுமாறாக கண்ணம்மாவிடம் பேசுகிறார்.

இந்நிலையில் சமையல் அம்மா என்று அழைத்தபடி உள்ளே வருகிறார் லட்சுமி. அப்பொழுது கண்ணம்மா, லட்சுமியிடம் இனி நீ என்னை எப்பொழுதும் சமையல் அம்மா என கூப்பிட கூடாது எனவும், வா நம்ம வீட்டுக்கு போலாம், டாக்டர் அங்கிளுக்கு டாட்டா சொல்லு என கூறிக்கொண்டு லக்ஷ்மியை அழைத்து செல்கிறார். இவை அனைத்தையும் மறைந்து இருந்து சௌந்தர்யா மற்றும் வேணு கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் சௌந்தர்யாவிடம் செல்லும் பாரதி, நக்கலாக பல கேள்விகள் கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா, வேணு மற்றும் அஞ்சலி அமைதியாக இருக்கிறனர். அதன் பின்னர் அவர்கள் கூறிய பொய் குறித்து கேலி கிண்டலுடன் பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் எல்லாரும் நல்ல நடிச்சீங்க, ஆனால் அந்த சின்ன குழந்தை லட்சுமி உங்களுக்கெல்லாம் ஒரு படி மேல போய் அவ்வளவு சிறப்பாக நடித்ததாக கூறுகிறார். இவ்வாறு பாரதி தனது ஆவேசத்தை குடும்பத்திடம் காட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here