தனத்தின் குழந்தை பிறப்பு குறித்த செய்தி அறிந்து சந்தோஷத்தில் மீண்டும் வாய் திறந்து பேசிய மூர்த்தியின் அம்மா…!ஆனந்த கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!!

0

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டு டாப் சீரியல்கள் லிஸ்டில் ஒன்றாக விளங்கும் நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்று, தனத்திற்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை அறிந்து சந்தோஷத்தில் லட்சுமி மீண்டும் அனைவரிடமும் பேசுகிறார். இதனால் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்திக்கு தெரியாமல் தனம், ஜீவா மற்றும் கதிர் மூலம் கண்ணனுக்கு உதவ திட்டமிடுகிறார். இதனை மறைந்திருந்து கேட்கிறார் மூர்த்தி. இந்நிலையில் இன்றைய கதைக்களமாக , தனம் கண்ணனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து மூர்த்திக்கு தெரியாமல் அனுப்புமாறு கூறுகிறார்.

இதனை மறைந்திருந்து கேட்கும் மூர்த்தி எப்பிடியோ அவன் கஷ்டப்படாமல் இருந்தால் சரி தான் என்று  மனதில் நினைத்து கொண்டு தனத்தை வீட்டுக்கு கூப்பிட்டு செல்கிறார். அதன் பின்னர் ஜீவா மற்றும் கதிர் இருவரும் இணைந்து ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பார்த்து பார்த்து ஒரு அட்டை பெட்டியில் வைத்து தயார் செய்கின்றனர்.

மேலும் கண்ணனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அதில் வைக்கின்றனர். அதன் பின்னர்  தன்னுடைய கடையில் வேலை செய்யும் பையனை அழைத்து கண்ணன் வீட்டிற்கு சென்று இந்த பொருட்களை கொடுத்து வருமாறும், வெளியே வைத்து விட்டு  கதவை தட்டிவிட்டு  வருமாறு ஜீவா மற்றும் கதிர் கூறி அனுப்புகின்றனர்.

இந்நிலையில் வீட்டிற்கு வரும் மூர்த்தி மற்றும் தனத்திடம், முல்லை மற்றும் மீனா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் தனத்தின் அம்மா குழந்தை எப்பொழுது பிறக்கும் என கேட்க , இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கும் என டாக்டர் கூறியதாக சொல்கிறார் தனம். இதை கேட்டு குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் தனத்தின் அம்மா உனக்கு கண்டிப்பாக ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறுகிறார்.

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து மூர்த்தியின் அம்மாவிடம் சென்று டாக்டர் சொன்னதை சொல்கின்றனர். மேலும் தனத்திற்கு இன்னும் இரு வாரங்களில் குழந்தை பிறக்க உள்ளதாக கூற அதை கேட்டு சந்தோசப்பட்டு லட்சுமி  தனத்திடம் சிரித்து கொண்டே பேசுகிறார்.

மேலும் அவர் மீண்டும் பேசியதை கண்டு குடும்பம் முழுவதும் ஆனந்தத்தில் உள்ளது. அதன் பின்னர் லட்சுமி மூர்த்தியிடம் கண்ணனை பற்றி வருத்தப்பட்டு பேசுகிறார். மேலும் மூர்த்தியிடம் லட்சுமி, இனி உன்ன வாழ்க்கையை நல்லபடியாக பார்க்குமாறு அறிவுரை கூறுகிறார். இதற்கு மூர்த்தி விரைவில் எல்லாம் சரியாகி விடும் என ஆறுதல் கூறுகிறார்.

அதன் பின்னர் பிரசவத்திற்கு தேவையான அனைத்தையும் தனத்தின் அம்மா, மீனா, முல்லை சேர்ந்து தயார் செய்கின்றனர். இவ்வாறு குழந்தை பிறக்கப்போகும் சந்தோசத்தில் உள்ளது குடும்பம். இத்துடன் இன்றைய கதை முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here