கதிர், முல்லையை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ஒட்டுமொத்த குடுமபம் – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையின் டிரீட்மென்ட் விஷயத்தை வைத்தே பல பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ஜனார்த்தனன் தன் மகள் எதற்கு கடனை கட்ட வேண்டும் என்று கதிரை கண்டபடி திட்டி விடுகிறார். இதே பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்க இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பூகம்பமே வெடித்துள்ளது.

அதாவது இப்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து கடன்காரர்கள் கடைக்கு வந்து கத்திய விஷயத்தை பற்றி விசாரிக்கிறார். அப்பொழுது முல்லையின் டிரீட்மென்ட்டிற்கு வாங்கிய பணத்திற்கு தான் என்று ஜீவா சொல்ல ஜனார்த்தனன் கத்த ஆரம்பிக்கிறார்.

இதனை கேட்ட கஸ்தூரி வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சொல்கிறார். இதனால் வீட்டில் பெரிய பிரச்னையாகிறது. முல்லையின் அம்மாவும் சண்டைக்கு வருகிறார். கடைசியில் தனம் தனது தங்க வளையலை கழட்டி கொடுக்கிறார். இதனை வைத்து மீனாவிடம் காசை கொடுக்க சொல்கிறார். அப்பொழுது தனத்தின் அம்மா அதனை தடுத்து விடுகிறார்.

உன்னிடம் இருப்பதே இந்த வளையல் மட்டும் தான் என்று சொல்ல கதிர் இடிந்து போகிறார். இன்னும் கொஞ்ச நாளில் எல்லா கடனையும் நான் அடைச்சுடுறேன், நாங்க வீட்டை விட்டு வெளியே போறோம் என்று சொல்கிறார். இதனால் மூர்த்தி கதிகலங்கி போகிறார். இங்க இருந்து கிளம்ப கூடாது என்று திட்டுகிறார். ஆனால் கதிர் அதை கேட்கும் மனநிலையில் இல்லை. வீட்டை விட்டே வெளியேறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here