தமிழை உயர்த்தி பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…!மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!

0
தமிழை உயர்த்தி பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை...!மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!
தமிழை உயர்த்தி பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை...!மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்கள் உடன் ஒளிபரப்பாகி  வருகிறது. இந்த சீரியலில் வீட்டின் இரண்டாவது மருமகள் மீனாவாக  நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

விஜய் டிவியில் பெரிய குடும்பத்தை மையமாக கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில்  வீட்டின் இரண்டாவது தம்பி ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த சீரியலில், கூட்டு குடும்பத்தில் குதர்க்கமாக பேசி அடிக்கடி சண்டை ஏற்படுத்தி வந்தார் மீனா. மேலும் இவர் தான் அந்த சீரியலின் வில்லியாக இருப்பார் என்று அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் தற்போது அந்த சீரியலில், வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்காக வீட்டில் மூர்த்தியிடம் பேசுவது,

மேலும் தன் அப்பாவின் உதவியால் அவர்களுக்கு தங்க வீடு ஏற்பாடு செய்வது போன்ற இவரின் பல செயல்கள் அவரின் மீதான அபிமானத்தை மாற்றியது. மேலும் இந்த சீரியலில் அவரின் இந்த மாற்றம் அவருக்கு  மேலும் பல ரசிகர்களை  உருவாக்கியது. மேலும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில்  பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மலையாளத்தில் தன்னுடைய தாய் மொழியான தமிழை உயர்த்தி பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here