தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம் …!கண்கலங்க வைத்த புகைப்படங்கள்!!!

0
தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்
தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நேற்று தன்னுடைய 44வது  பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். தற்போது அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி அவர்களின் மகன் தான் நடிகர்  விஷால். இவர் சினிமா உலகில் ஒரு உதவி இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதாவது இவர் வேதம், ஏழுமலை உள்ளிட்ட படங்களில் நடிகர் அர்ஜுன் உடன்  உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் செல்லமே என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். இவர் நடித்த திமிரு, சண்டக்கோழி, அவன் இவன் உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை படைத்த படங்கள்.

தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்
தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்

மேலும் இவருக்கு திரையில் ஒரு முன்னணி நடிகர் என்ற ஒரு இடத்தையும் பெற்று தந்தது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின்   படங்களில் நடிக்க தொடங்கினார். எனினும் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் எனிமி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆகஸ்ட் 29 ஆம் தேதியான நேற்று தன்னுடைய 44 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். மேலும் தன்னுடைய இந்த பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்தில் உள்ளவர்களுடன் கொண்டாடி உள்ளார்.

தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்
தன் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று கொண்டாடிய திரைப்பிரபலம்

அதாவது அந்த இல்லத்திற்கு  நேரில் சென்று அங்கு இருப்பவர்களுக்கு உணவளித்து, சிறு குழந்தைகளின்  மத்தியில் அமர்ந்து அந்த குழந்தைகளுக்கு உணவு ஊட்டி, கேக் கட் பண்ணி கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகர் விஷாலுக்கு இவ்வளவு பெரிய மானசா? என நினைத்து கண்கலங்கி உள்ளனர். மேலும் தனது 31 வது படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்  லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். மேலும் அவரின் 31 வது படத்தின் பெயர் வீரமே வாகை சூடும் என்பதாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here