தனம் மற்றும் முல்லை பற்றி திரித்து கூறும் மீனாவின் அத்தை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பரபரப்பான திருப்பங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று பல அதிரடி திருப்பங்களுடன் எபிசொட் வர உள்ளது. இன்று இந்த திருப்பங்களுக்கு காரணம் மீனாவின் அத்தை அவர்களது வீட்டிற்கு வருவதே ஆகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் இன்று மீனாவின் அத்தை ஒருவர் வீட்டிற்கு வருகிறார். மீனாவின் தந்தை ஜனார்த்தனன் வீட்டிற்கு திடீர் என்று வந்ததும் அனைவரும் அவர் எதோ பிரச்னை எழுப்ப தான் வருகிறார் என்று நினைத்து விடுகின்றனர். ஆனால், அவர் தனது தங்கையை மீனா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மீனா தனது தந்தையினை பார்த்ததும் முதலில் குழம்பினாலும், பின் தனது அத்தையினை பார்த்ததும் குதூகலிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வழியாக தான் மீனா வீட்டிற்கு வந்ததாக தெரிவிக்கிறார். மீனாவும் அவரது அத்தையும் பல நாட்கள் பேசாத கதைகளை பேசுகின்றனர். பின், அவர் மீனாவின் குழந்தையினை கொஞ்சி விட்டு அனைவரிடமும் பேசி விட்டு வருவதாக சொல்லி விட்டு சென்று விடுகிறார்.

இதனை அடுத்து அவர் தனம் மற்றும் முல்லையிடம் சென்று பேசுகிறார். முதலில், தான் மீனாவிற்கு நல்ல மற்றும் சத்தான உணவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

அத்தையின் புகார்:

அதற்கு தனம் மற்றும் முல்லை இருவரும் தாங்கள் மீனாவிற்கு என்று தனியாக தான் உணவு தயாரிக்கின்றோம் என்றும் அதனால் உங்களுக்கு எதற்கு வீண் சிரமம் என்று தெரிவித்து விடுகின்றனர். பின், அவர் தனக்கு வெந்நீர் வேண்டும் என்று கூறுகிறார். அதனையும் தனம் மற்றும் முல்லை ஏற்கனவே தயாரித்து வைத்து விடுகின்றனர். இதனால் அவர் ஆச்சிரியம் அடைந்து விட்டு சென்று விடுகிறார்.

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல சீரியல்?? ரசிகர்கள் ஷாக்!!

ஆனால், மீனாவிடம் வந்து புலம்புகிறார். மீனா ஏன் இப்படி புலம்புகிறீர்கள் என்றும் அதற்கான காரணத்தையும் கேட்கிறார். அதற்கு அவர் தான் ஒரு சட்டி வெந்நீர் கேட்டதற்கு தனம் மற்றும் முல்லை இருவரும் தரவில்லை என்று புகார் தெரிவிக்கிறார். அதே போல் இருவரையும் குற்றமும் சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார். இதனால் மீனா குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here