இறங்கி வேலை செய்யணும்… அதுவும் இப்படி தான் செய்யணும்… ரசிகர்களுக்கு நச் அட்வைஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!! 

0

விஜய் டிவியில் வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வீட்டின் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

மிகவும் சந்தோஷமாக கூட்டு குடும்பமாக பயணித்த இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் ரகசிய திருமணத்திற்கு பிறகு, சோகம், கவலை என திசை மாறி போனது. அதாவது வீட்டின் நான்காவது தம்பியாக, மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தவர் கண்ணன். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலிக்க, அவருக்கு அவரின் சித்தி மூலம் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு நடக்க அதனால் வீட்டை விட்டு வெளியே வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, நண்பர்களின் உதவியால் திருமணம் செய்து கொள்கின்றனர். இதையடுத்து இருவரும் வாழ வழி தெரியாமல் தவித்து நிற்கையில், 3 அண்ணன்களும், அண்ணிகளும் தங்களால் முடிந்த உதவிகளை வேறு ஒருவர் மூலமாக செய்து வருகின்றனர். இவ்வாறு பல விறுவிறுப்பான காட்சிகளோடு கதை தொடர்கிறது.

pandian stores

தற்போது இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், தளபதி விஜய் அவர்களின் குருவி படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை தன் பாணியில் செம மாஸாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here