ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்படும் – மாநில சுகாதாரத்துறையின் மாஸ் இலக்கு!

0

தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போடப்படும் திட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய இலக்கு:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பாக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைந்து வந்து தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதோடு மட்டுமல்லாமல், அரசு பணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டு, அந்த சான்றிதழை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற திட்டத்தை சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இதனால், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி  வழங்குதலை மத்திய அரசு மேலும் அதிகப்படுத்தியது.  தற்போது வரை தடுப்பூசி கையிருப்பு போதுமான அளவு உள்ளதால், தடுப்பூசி செலுத்துவதில் எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்து நடந்து  வருகிறது. இந்த நிலையில், இந்த தடுப்பூசி செலுத்துதல் சார்ந்த ஒரு முக்கிய திட்டத்தை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 20 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். மாநில அரசின்  தடுப்பூசி செலுத்துதல் அத்தியாயத்தில்,  இந்த திட்டத்தின் இலக்கு புதிய வெற்றியாக  பார்க்கப்படும் என்பது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here