எடுக்க கூடாத இடத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்…!வைரலாகும் புகைப்படம்!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப தலைவர் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தின் பின்புறம் ஒரு குளியலறை அமைப்பில் உள்ளது.

விஜய் டிவியில் மக்களின் மிகுதியான வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு கூட்டு குடும்ப கதையை  மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு சீரியல். இதில் கடைசி தம்பி கண்ணன், வீட்டின் செல்லப் பிள்ளையாக, வறுமை அறியாத ஒருவராக வளர்க்கப்படுகிறார்.

கல்லூரி படிக்கும் ஒரு சிறு பையனாக, அனைவரையும் கலாய்த்து கொண்டு ஜாலியாக சுற்றி திரியும் கதாபாத்திரம் தான் கண்ணன். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒரு குழந்தையாக தெரியும் இவர், தனுக்கும் வயது வந்துவிட்டது என்பது போல ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலிக்க தொடங்குகிறார்.

இதனால் அவர் பல மன வேதனைகளை எதிர்கொண்டு வருகிறார். மேலும் தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல முடியாமலும், காதலை விட்டு கொடுக்க முடியாமலும் பரிதவித்து வருகிறார். அவரின் பரிதவிப்பு ரசிகர்கள் மத்தியில் அவர்களின் காதல் கைகூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அந்த சீரியலில் ஒரு தவிர்க்க முடியாத கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம்.

இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது சீரியல் குழுவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் செய்யும் ரீல்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் தற்போது சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னணி ஒரு குளியலறை அமைப்பில் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here