தளபதி விஜயாக மாறிய டேவிட் வார்னர் – வைரலாகி வரும் வீடியோ!!!

0
தளபதி விஜயாக மாறிய டேவிட் வார்னர் - வைரலாகி வரும் வீடியோ!!!
தளபதி விஜயாக மாறிய டேவிட் வார்னர் - வைரலாகி வரும் வீடியோ!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் அதிகளவில் வைரலாகி வருகிறார். இப்பொழுது தளபதி விஜயின் பாடலுக்கும் வார்னர் ஒரு வீடியோ தயார் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தளபதியாக மாறிய வார்னர்…

உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதேபோல் ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதுபோல்தான் ஆஸ்திரேலிய அணியின் வீரரான டேவிட் வார்னர்க்கும் இப்பொழுது இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் அவர் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் தான். நாம் இந்திய கலாச்சாரம் மீது அதிகம் ஆர்வம் காட்டி வரும் வார்னர், சமீபத்தில் டிக் டாக் வீடியோ மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய சினிமாவின் பாடல்களுக்கு டிக் டாக் மற்றும் ரீல்ஸ் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

வார்னர் பெரும்பாலும் நடன வீடியோக்களை செய்து வருவார் அதிலும் குறிப்பாக இந்திய திரைப்படங்களின் காட்சிகள் மற்றும் நடிகர்களின் முகங்களை மாற்றியமைத்து தனது முகத்தை அந்த வீடியோவில் எடிட் செய்து விடுவார். அதனால் அவரின் விடீயோக்களும் அதிகளவில் பரவலாகி வருகிறது. இந்நிலையில் இப்பொழுது தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் செல்லா குட்டி பாடலுக்கு தனது தலையை அப்பாடலில் வரும் விஜயின் வலுடன் பொருந்தியது போல் ஒரு விடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துளளர். அந்த வீடியோ இப்பொழுதிகு அதிகளவில் தளபதி ரசிகர்களாலும் வார்னர் ரசிகர்களாலும் வைரலாகி அதிக வரவேற்பும் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here