ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்த சிறுமியின் பாடல்!!!!

0
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!
ஐயோ பாவம்., இது என்ன ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த சோதனை - மொத்த மார்க்கெட்டும் சரிந்த சோகம்!!

ஆஸ்கர் நாயகன் பாடலை தமிழ் ஹிந்தி என இரு மொழிகளிலும் பாடி அசத்திய சிறுமியின் பாடல் விடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஏ. ஆர். ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த சிறுமி…

ஏ.ஆர்.ரஹ்மான் 1992 ஆம் ஆண்டு ரோஜா என்னும் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார், அபவர் இசையமைத்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அவரது பாடலுக்கும் இசைக்கும் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. நாளடைவில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழி மட்டுமல்லாது ஹிந்தி மொழிகளிலும் பாடல்களை இசையமைக்க ஆரம்பித்தார். ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பும் இவருக்கென ஒரு ரசிகர்கள் உலகமே இருந்தது.பின் 2008 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் என்னும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதையும் பெற்றார். இவரால் இந்தியாவே பெருமை அடைந்தது. அதனால் ஏ.ஆர்.ரஹ்மானை ஆஸ்கர் நாயகன் என்று ரசிகர்களும் மக்களும் அழைத்த வந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

சமீபத்தில் வெளிவந்த 99 சாங்ஸ் படத்தை தயாரித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை இவரே எழுதியுமுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்பொழுது மூப்பிலா தமிழ் தாயே என்ற பாடலை இயக்கி வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன, இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடலை சிறுமி ஒருவர் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வந்துள்ளது. அந்த விடியோவை பார்த்த ஏ.ஆர்.ரகுமான் அந்த விடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், இவரின் இத்தகைய செயலுக்கும் அந்த விடீயோவிற்கும் மக்களும் ரசிகர்களும் அதிகளவில் பாராட்டுகளையும் லைக்ஸ்களையும் அள்ளி தெளித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here