இதுவரை பார்த்திராத பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் அழகிய குடும்பம் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஜீவா தற்போது தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அக்கா வீட்டிற்கு வந்ததை அடுத்து பல பிரச்னைகள் தலைதூக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் ஐஸ்வர்யாவின் பின்னால் சுற்ற அது கண்ணனுக்கு கோவமாக வருகிறது.

இது ஐஸ்வர்யாவிற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். மேலும் மீனா முல்லையின் அக்காவை வம்பிழுத்துக்கொண்டே இருக்க ஜீவாவும் அப்படி இப்படி சமாளித்து வாழ்கிறார்.

ஒரு பக்கம் ஜனார்த்தனன் ஜீவாவை எப்படி வீட்டோடு மாப்பிள்ளையாக்குவது என்று பலவாறு யோசித்துக்கொண்டுள்ளார். மேலும் மீனாவின் டார்ச்சரையும் சமாளித்து வீட்டில் அமைதி நிலவ ஜீவாவும் ஒரு பெரிய காரணம்.

அந்த ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் வெங்கட். இவர் ‘கனாக்காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். சன் டிவியிலும் விஜய் டிவியிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அவருக்கு இந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான். தற்போது ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் ஜீவா தனது குடும்பத்துடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here