கண்ணணை இழுத்து பிடித்து முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா – ரொமான்ஸ் சீனில் கதிர் முல்லையையே மிஞ்சும் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் தங்க வீடு கிடைத்ததை அடுத்து இன்றைக்கு ஒரு பெரிய ரொமான்ஸ் சீன் ரசிகர்களுக்கு காத்துக்கொண்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தங்க வீடு கிடைத்ததை நினைத்து நிம்மதியாக உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் வீட்டுல நம்மளை எதுக்குவாங்க என்று ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். அதற்கு ஐஸ்வர்யா அவங்க ஏத்துக்குற மாதிரியே இல்லையே மாமா என்று சொல்கிறார்.

pandian stores

மேலும் தான் வேலைக்கு செல்வதாகவும் சொல்கிறார். கண்ணனுக்கு இது ஷாக்காக இருக்கிறது. கண்ணன் நான் வேலைக்கு போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஐஸ்வர்யா, உங்க வீட்டுல நீ படிக்கணும்னு தானே அசைபட்டாங்க, அதனால நீ படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போ என்று சொல்கிறார்.

ஆனால் கண்ணனோ அதை அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்கிறார். சரி தூங்க செல்லலாம் என்று சொல்ல டக்கென்று ஐஸ்வர்யா கண்ணன் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். உடனே கண்ணன் மனநிலையும் மாற ஐஸ்வர்யாவிற்கு வெக்கம் வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யா கையை பிடித்து இழுத்து முத்தம் தருகிறார்.

கதிர் முல்லை ஜோடிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தான் இந்த சீன் இருந்தது. காலையில் ஐஸ்வர்யா கிளம்பி இருக்க பின்னால் இருந்து கட்டிப்பிடிக்கிறார் கண்ணன்.

அதற்கு ஐஸ்வர்யாவும் சினுங்க இன்றைய எபிசோடு ஒரு ரொமான்ஸ் நிறைந்ததாகவே உள்ளது. அடுத்ததாக மல்லி ஊருக்கு கிளம்ப தயாராக இருக்க பிரஷாந்திடம் ஏன் தன்னுடன் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு பிரஷாந்த் தன் மனநிலை அந்த மாதிரி என்று சொல்கிறார். அதற்கு மல்லி அவளை கல்யாணம் பண்ணி மதுரைக்கு கூட்டிட்டு போய் அப்பவும் அவ கண்ணன் கூட பேசிட்டு இருந்தா அது நம் குடும்பத்திற்கே அசிங்கம் என்று சொல்கிறார்.

அப்படி மட்டும் நடந்திருந்தால் கண்டிப்பாக கொலை பண்ணி இருப்பேன் என்றும் சொல்கிறார்.  அப்பொழுது வந்து கஸ்தூரி மல்லியிடம் உங்க அம்மா வீட்டுல தான் கண்ணன் ஐஸ்வர்யா தங்கி இருக்காங்க என்று சொல்ல கோவமாக வீட்டிற்கு சென்று அவர்களை வெளியேற்றும்படி கத்துகிறார்.

இதனால் ஐஸ்வர்யா வாங்க மாமா போகலாம் என்று சொல்லி அழைத்து செல்கிறார். இதனை பிரஷாந்த் கோபத்துடன் பார்த்தபடி நிற்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here