தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை!!

0

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பான ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20, ஆகஸ்ட் 2021) நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேற்கொள்ள உள்ளார்.

மாநிலத்தில் கொரோனா பரவலின் வேகம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது. முழு ஊரடங்கை மே 10 ஆம் தேதியில் இருந்து அமல்ப்படுத்தப்பட்டது.

ஊரடங்கை தமிழக மக்கள் சரியாக பின்பற்றியதால் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வேகமாக குறைந்தது. இதனால் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதல் தளர்வுகள் அளிப்பது அல்லது அமலில் உள்ள ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மஅமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here