Asia Cup 2022 : PAK Vs HK – சூப்பர் சுற்றுக்கு முன்னேறி இன்று வெல்ல போவது யார்?

0
Asia Cup 2022 : PAK Vs HK - சூப்பர் சுற்றுக்கு முன்னேறி இன்று வெல்ல போவது யார்?
Asia Cup 2022 : PAK Vs HK - சூப்பர் சுற்றுக்கு முன்னேறி இன்று வெல்ல போவது யார்?

இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் நிகழப்போவது என்ன?

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், நிஜாம் கான் தலைமையிலான ஹாங்காங் அணியும் இன்று ஆசிய கோப்பை தொடருக்கான கடைசியில் லீக் ஆட்டத்தில் துபாயில் மோத உள்ளனர். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் இந்திய அணியிடம் போட்டியிட்டு கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் இந்த இரு அணிகளும் ஏற்கனவே தோல்வியை கண்டுள்ளதால் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தான் அணி வலுவாக உள்ளதால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இதில் வெற்றி பெறும் அணிகளை தாண்டி இந்திய அணியுடன் போட்டியிடப் போகும் அணி எது என்பதை பற்றி தெரிந்து கொள்ளத்தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் :

பாபர் ஆசாம் (கேட்ச்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், முகமது ஹஸ்னைன், ஹசன் ஏ ஹலீன்.

ஹாங்காங்:  

நிஜாகத் கான் (கேட்ச்), கிஞ்சித் ஷா, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், பாபர் ஹயாத், அஃப்தாப் ஹுசைன், அதீக் இக்பால், அய்சாஸ் கான், எஹ்சான் கான், ஸ்காட் மெக்கெச்னி (wk), கசன்ஃபர் முகமது, யாசிம் ஷா முர்தாசா, தனஞ்சய் ராவ் , ஆயுஷ் சுக்லா, அஹான் திரிவேதி, முகமது வஹீத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here