போட்டியில் சம்பவம் செய்த பாக். வீரர்கள் – களத்தில் அம்பயருடன் சண்டை போட்ட பாபர் அசாம்!!

0
போட்டியில் சம்பவம் செய்த பாக். வீரர்கள் - களத்தில் அம்பயருடன் சண்டை போட்ட பாபர் அசாம்!!
போட்டியில் சம்பவம் செய்த பாக். வீரர்கள் - களத்தில் அம்பயருடன் சண்டை போட்ட பாபர் அசாம்!!

நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் மைதானத்தில் இருந்த நடுவருடன் சண்டைக்கு சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு சர்ச்சையா??

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி தகுதி சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து 17 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர். இதனை அடுத்து இந்த இரு அணிகளும் நாளை நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹசன் அலி பந்து வீசினார். அப்போது ஷார்ட் பிட்ச் சாக போடப்பட்ட முதல் பந்து நிஷங்கா பேட்டில் அவுட்சைட் எட்ஜாக மாறியதால் மிஸ்ஸானது. ஆனால் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான் அவுட் என அம்பயரிடம் முறையிட்டார். இதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கூடி பேச இதனைப் பொருட்படுத்தாமல் மைதானத்தில் இருந்த அம்பயர் அவராகவே டி.ஆர்.எஸ்-க்கு முறையிட்டு சிக்னல் காட்டினார்.

டி.ஆர்.எஸ்-ன் மூலம் பந்தின் திசையை ஆராய்ந்து நாட் அவுட் என்று முடிவை அறிவித்தனர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு இருந்த ஒரு டி.ஆர்.எஸ் வாய்ப்பு பறிபோனது. இதனால் ஆத்திரம் அடைந்து அணியின் கேப்டன் பாபர் அசாம், நான் டி.ஆர்.எஸ் கேட்கவில்லை. பிறகு நீங்களா ஏன் முடிவெடுத்து சிக்னல் கொடுத்தீங்க என மிகுந்த கோபத்துடன் கேட்டார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு போட்டியிலும் இது போன்ற பிரச்சனைகளை செய்வதால் ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here