விதிமுறைகளை மீறிய பாகிஸ்தான் வீரர் – சுய தனிமைக்கு அனுப்பிய நிர்வாகம்!!

0

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் உயிர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அணி நிர்வாகம் கூறியுள்ளார். கொரோனா பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி பல்வேறு பாதுகாப்பு விதிகளை பின்பற்றி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

சுய தனிமை:

இங்கிலாந்தில் தங்கி விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதனை முகமது ஹபீஸ் மீறியுள்ளார். அவர் ஏகாசில் ஆன்-சைட் ஹோட்டலை ஒட்டியுள்ள கோல்ஃப் மைதானத்திற்கு வருகை தந்தபோது, ​​ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் படி ஹபீஸ் சுயதனிமைபடுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

அந்த அறிக்கையில் “ஹபீஸ் ஒரு கோல்ஃப் மைதானத்திற்குச் சென்றார், இது அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் உள்ளது மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். அவர் ஒரு பொது நபருடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஹபீஸ் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி நெறிமுறையை மீறியுள்ளார். இதனால் நிர்வாகம் அவரை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏகாசில் வீரர்கள் கோல்ஃப் மைதானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், கோல்ஃப் மைதானம் இன்னும் பொதுமக்களுக்குத் திறந்திருப்பதால், வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே யாருடனும் தொடர்புகொள்வதைத் தவிர்க்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here