டேஸ்டியான “பால் கொழுக்கட்டை” ரெசிபி – வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ரெசிபி!!

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது, ஸ்வீட் தான். அந்த வகையில் இன்று உடலுக்கு கெடுதியினை ஏற்படுத்தாத “பால் கொழுக்கட்டை” ரெசிபி சுவையாக செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை செய்ய
  • அரிசி மாவு – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 2 டீஸ்பூன்
  • வெந்நீர் – தேவையான அளவு
பாகு செய்ய
  • வெல்லம் – 200 கிராம்
  • தண்ணீர் – தேவையான அளவு
பிற பொருட்கள்
  • பால் – 2 கப்
  • ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
  • தேங்காய் பால் – 1 கப்

செய்முறை

முதலில், எடுத்து வைத்துள்ள அரிசி மாவினை நெய், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மொத்தமாக தண்ணீரை ஊற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் எடுத்து வைத்துள்ள வெல்லத்தினை சேர்க்க வேண்டும். அடுப்பினை குறைந்த அளவில் வைத்து கொண்டு, அடிபிடிக்காமல் கிண்ட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், அதனை ஆற விட வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் பால் சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீரும் சேர்த்து கொள்ள வேண்டும். பால் கொதித்ததும், அதில் அரிசி மாவு உருண்டைகளை சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் அதனை கொதிக்க விட வேண்டும்.

நடராஜனுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பின், இதில் ஏலக்காய் பொடி, தேங்காய் பால் மற்றும் வெல்ல பாகு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்ததும், அடுப்பினை அணைத்து விட வேண்டும். மேலே, ஏலக்காய் தூள் வேண்டுமென்றால் தூவி கொள்ளலாம். அவ்ளோ தான்!!

சுவையான “பால் கொழுக்கட்டை” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here