விரைவில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி – ரஷ்ய தூதரகம் தகவல்!!

0

சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்னும் தடுப்பூசியை வழங்க மத்திய அரசு அனுமதியளித்தது. தற்போது இந்த தடுப்பூசி விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று ரஷ்ய இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மக்களிடையே மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் பல தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தற்போது இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா நோய் பரவல் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக மூன்றாவது தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை விநியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 85 கோடிக்கும் அதிகமான டோஸுகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதனால் உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு சுமார் 42.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜனுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இதனை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டின்ட்ரீவ் தெரிவித்தார். மேலும் இந்த ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் வெளியாகும் என்று ரஷ்ய இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் இந்த தடுப்பூசி நாட்டில் கொரோனா பரவலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here