தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – பாகிஸ்தானில் தனிமைப்படுத்தப்பட்ட ஊர்..!

0

கொரோனா வைரஸ் நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த தப்லிகி ஜமாத் சேர்ந்த உறுப்பினர்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான்:

பாகிஸ்தானில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது, 40 பேர் மரணமடைந்துள்ளனர், பஞ்சாபில் அதிகபட்சமாக 1,196 கேஸ்கள், சிந்த் மாகாணத்தில் 830 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்லாமியக் குழுவின் வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 1000 பேர்களை தடம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடி தரப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

தப்லிகி ஜமாத் கூட்டம் : 9000 பேரும் ...

அவர்களை பரிசோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நகரமே தனிமை படுத்தியுள்ளது. அந்த நகருக்கு யாரும் செல்ல முடியாது. அங்கிருந்து யாரும் வெளியே வரவும் முடியாது.

மற்ற மாவட்டங்கள்

பஞ்சாப் மட்டுமல்லாது, ராவல்பிண்டி, ஜீலம், நன்கனா சாஹிப், சர்கோதா, வேஹாரி, ஃபைசலாபாத், கலாஷா காகு, மற்றும் ரஹிம் யார் கான் மாவடட்ங்களைச் சேர்ந்த தல்லிகி ஜமாத் போதகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தப்லிகி ஜமாத் | | Patrikai - Tamil Daily - latest ...

ஈரானிலிருந்து திரும்பிய 200 ஷியா முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு கரோனா பாசிட்டிவ் ஆக இவர்கள் முல்டான் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானில் மட்டுமல்ல கரோனா வைரஸைச் சுமந்து செல்பவர்களாக தப்லிகி ஜமாத் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கருதப்படுவது இந்தியா, மலேசியா, புருனேய் ஆகியவற்றிலும் தொடர்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here