கொரோனாவால் குவியும் ஆர்டர்கள் – 1 லட்சம் பேரை பணியமர்த்தும் அமேசான்..!

0
Amazon
Amazon

கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மக்கள் அனைவரும் கூடும் இடத்திற்கு வருவதை நிறைய பேர் தவிர்த்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் ஷாப்பிங் கலைகட்டுகிறது. கொரோனா அச்சத்தால் வெளியே செல்வதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். இதனால் Amazon இல் ஆர்டர்கள் குவிகின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்..!

மக்கள் வெளியே வர தவிர்த்து வருவதால் சின்ன சின்ன பொருளை கூட ஆன்லைனிலே வாங்குகின்றனர். ஏனெனில் கொரோனா பரவாமல் இருக்க அந்தந்த நாடுகள் சில முன்னெச்சரிக்கைகளை வலியுறுத்தி உள்ளது. வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும். ஹாண்ட் வாஷ் பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

எனவே மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர். அதனால் ஆன்லைனிலேயே அனைத்தையும் வாங்கி கொள்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்வதால் ஆங்காங்கே ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் Amazon திண்டாடி வருகிறது. மேலும் வால்மார்ட் போன்ற இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

டோர் டெலிவரி..!

Amazon உள்ளிட்ட தளங்களில் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் அவர்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. அவர்களின் நற்பெயரையும் காத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் ஆர்டர்கள் குறித்த நேரத்தில் சென்றடைய வேண்டும். மேலும் மக்கள் சானிட்டரி நாப்கின் கூட ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். இதனால் Amazon 1 லட்சம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.

டெலிவரி பிரச்சனையை சமாளிக்க ஒரு லட்சம் ஊழியர்களை புதிதாக வேலைக்கு பணியமர்த்த பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மணிக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது அமேசான்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here