இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் பகீர் அறிக்கை!!

0
இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் பகீர் அறிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மழைப்பொழி அதிகமாக பதிவாகியுள்ளது. இதையடுத்து தற்போது குளிர் காலம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தாக்கத்தை வடமாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் வட மாநிலங்களில் தொழிற்சாலை, வாகனம், தீ மூட்டுதல் போன்றவற்றினால் காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்கள் சீராக சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், காற்று மாசுபாட்டை தடுக்க தடை பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றனர்.

இனி மாதத்தில் 4வது சனிக்கிழமை அரசு விடுமுறை., தலைமைச் செயலர் கூட்டத்தில் புதிய முடிவு!!

இதைத் தொடர்ந்து தர்மசாலா, டேராடூன் போன்ற குளிர் பிரதேசங்களை விட மிகக் குறைவான வெப்பநிலை தலைநகர் டெல்லியில் நிலவுகிறது. இதனால் அதிக மூடு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இரவு நேரங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிக குளிர் அலை வீச இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here