1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜன.8ம் தேதி வரை மூட முடிவு., ஜார்கண்ட் கல்வித்துறை அறிவிப்பு!!

0
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜன.8ம் தேதி வரை மூட முடிவு., ஜார்கண்ட் கல்வித்துறை அறிவிப்பு!!
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜன.8ம் தேதி வரை மூட முடிவு., ஜார்கண்ட் கல்வித்துறை அறிவிப்பு!!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் வருகிற ஜனவரி 8ம் தேதி வரை மூட வேண்டும் என ஜார்கண்ட் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்வித்துறை முடிவு :

பருவமழை காலம் முடிந்த பிறகு, சமீப நாட்களாக குளிர் காலம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் வட மாநிலங்களில், கடும் மோசமான பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள், கடும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, சமீபத்தில் உத்தர பிரதேச மாநில லக்னோ மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில், மோசமான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இங்கு ஜனவரி 8ஆம் தேதி வரை 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் பகீர் அறிக்கை!!

இதனை கருத்தில் கொண்டு, ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here