ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை தொடரும் – உயர்நீதிமன்றம் அதிரடி!!

0

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்தது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி:

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து தங்கள் பணத்தை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தடையை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபதாரம், மேலும் 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Chennai_High_Court
Chennai_High_Court

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு!!

இந்த அவசர சட்டத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த அவசர சட்டத்தை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவசர சட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here