30 நிமிஷத்துல ‘ஆல்கஹால்’ சேர்க்காத “பிரிட்டிஷ் ரிச் ப்ளம் கேக்” ரெசிபி – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!!

0

கிறிஸ்துமஸ் கிட்டக்க வந்தாச்சு, கிறிஸ்துமஸ்னாலே நம்ம நியாபகத்துக்கு வர்ற முதல் விஷயம், கேக் தாங்க. ஆனா நம்மள்ல பலர் கேக் செய்றதுனா ஏதோ பெரிய்ய விஷயமா நினைச்சு அந்த பக்கமே போக மாட்டாங்க. கடைல மட்டும் தான் வாங்குவாங்க. என்னதான் நம்ம கடைல வாங்கி சாப்பிட்டாலும் நம்ம கையாள செய்ஞ்சு சாப்பிடுற மாதிரி வருமாங்க. இந்த கிறிஸ்துமஸ்க்கு எல்லாரும் வீட்லயே கேக் செஞ்சு உங்க குடும்பத்தையும், உங்க சொந்தக்காரவங்களையும் குஷிபடுத்துங்க!!!

அப்புறம் முக்கியமா எல்லாரும் “எங்க கிட்ட கேக் செய்ய மைக்ரோவேவ் ஓவன் இல்லையே நாங்க எப்படி கேக் செய்ய முடியும்னு” நினைப்பாங்க, கவலைய விடுங்க குக்கர்லேயே சூப்பரா செய்யலாம்!!! அதுவும் ஆல்கஹால் எதுவும் சேர்க்காதா “பிளம் கேக்” நம்ப முடியலையா??? எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க!!!

தேவையான பொருட்கள்:

கருப்பு உலர் திராட்சை – 1 1/2 கப்
பேரிட்சை – 5
புருனே பழம் – 5
டூட்டி ப்ருட்டி – 2 டேபிள் ஸ்பூன்
இனிப்பூட்டப்பட்ட உலர் பழங்கள் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப் + 1/4 கப் ( கேராமில்க் ) செய்வதற்கு
தண்ணீர் – 1/3 கப் + 1/2 கப்
ஆரஞ்சு பழத்தின் சாறு – 1 முழு பழம்
பேக்கிங் சோடா – 1 டீ ஸ்பூன்
பட்டைத்தூள் – 1 டீ ஸ்பூன்
இஞ்சிப்பொடி – 1 டீ ஸ்பூன்
முட்டை – 2
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீ ஸ்பூன்
வெண்ணைய் – 100 கிராம்

டிப்ஸ்:

குக்கரில் செய்பவர்கள் கேக் செய்யும் போது, குக்கரில் விசில் மற்றும் கேஸ்கட் போட வேண்டாம். ஓவனில் செய்பவர்கள் முதலில் ஓவனை 180 டிகிரி செல்ஸியஸ்க்கு pre-heat செய்து கொள்ள வேண்டும். பிளம் கேக் செய்வதற்கு 8 இன்ச் ரவுண்ட் கேக் மோல்ட் ல் பார்ச்மெண்ட் பேப்பர் ஐ போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் சிறிது பட்டர்ஐ தடவிக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

முதலில் ஒரு சாஸ் பேனில் உலர் பழங்கள், பருப்புகள், 1/2 கப் தண்ணீர் மற்றும் ஆரஞ்சின் சாறு ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கலந்து விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி தனியே ஆற விட வேண்டும். இப்பொழுது, மற்றொரு சாஸ் பேனில் சர்க்கரை, 1/3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கேராமில்க் மிருதுவாகும் வரை கலந்து விடவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு பௌலில் சர்க்கரை, பட்டர், வெண்ணிலா இவற்றை சேர்த்து கிரீம் ஆகும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும். இந்த கிரீமில் முட்டை, கேரமில்க், மசாலாத்தூள், மாவு, பேக்கிங் சோடா இவற்றை ஒன்று ஒன்றாக சேர்த்து கலந்து விடவும். இந்த கலவையில் ஆற வைத்திருக்கும் உலர் பழங்களையம் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இந்த கலவையை கேக் மோல்ட்ல் ஊற்றி 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஓவன் அல்லது குக்கரில் வேக வைக்க வேண்டும். கேக் வெந்து முழுவதும் ஆறிய பிறகு பரிமாற வேண்டும். இப்பொழுது சூப்பரான, சாஃப்டான “பிரிட்டிஷ் ரிச் Plum கேக்” தயார். கிஸ்துமஸ்க்கு இந்த ஸ்பெஷல் கேக் உங்க வீட்ல செஞ்சு குடுத்து உங்க உங்க கிறிஸ்துமசையும் ஸ்பெஷல் ஆகுங்க. நெறைய உலர் பழங்கள் சேர்க்குறதுனால உங்க குழந்தைகளுக்கும் நிறைய விட்டமின்ஸ் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here