வெங்காயத்தை போல உருளைக் கிழங்கு விலையும் கட்டுப்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு!!

0

வெங்காயத்தின் விலை உயர்ந்த நேரத்தில், ஏற்றுமதி தடை செய்யப்பட்டு, இறக்குமதி அதிகரிக்கப்பட்டது. இதை போல, உருளைக் கிழங்கின் விலையும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்??

நாட்டில் காய்கறிகளின் உற்பத்தி அதிகமாகும் போது, விலை வீழ்ச்சி அடையும். சில நேரங்களில் இயற்கை சீற்றத்தின் காரணமாக, விலை உச்சத்தை எட்டும். சமீபத்தில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் கன மழை பெய்தது. இங்கு விளைந்த வெங்காய செடிகள் அழுகி விட்டன. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 லிருந்து ரூ.100க்கு விற்கப்பட்டன. இதனால் மக்கள் வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டனர். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து, விலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு உரிய நேரத்தில் தடை விதித்தது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தீபாவளிக்கு முன், கூடுதலாக 25 ஆயிரம் டன் வெங்காயம் வந்து விடும். வெங்காயத்தின் விலை கிலோ ரூ.65க்கு விற்பனையாகிறது. இதை போல, உருளை கிழங்கின் விலையும் கட்டுப்படுத்தப்படும். இரண்டு நாளில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளை கிழங்கு வந்து சேரும்,’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here