பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் – திரையுலகை உலுக்கிய சோகம்!

0
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!

மலையாள நடிகர் ராஜ் மோகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்நிலையில் அவருடைய உடல் நேற்று கேரள அரசால் அடக்கம் செய்யப்பட்டது.

மலையாள நடிகர் காலமானார்:

1970களில் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் தான் ராஜ் மோகன்.இயக்குனர் கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் என்பவர் கடந்த 1967ம் ஆண்டு வெளியான இந்துலேகா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக ராஜ் மோகனை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு  ஏராளமான மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார். இதனை தொடர்ந்து முதல் படத்தை இயக்கிய கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் மகளை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

மேலும் சில காலங்களுக்கு பிறகு அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த தம்பதி பிரிந்தனர். இதனால் குடும்பத்தை விட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதையடுத்து அவரது மரணம் குறித்து குடும்பத்திற்கும் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்த போதிலும் , அவர்கள் யாரும் உடலை வாங்க முன் வரவில்லை.

அதிரடியாக திசை மாறிய விஜே சித்ரா மரண வழக்கு – ஹேமந்த்துக்கு எதிராக நண்பர் அளித்த வாக்குமூலம்!!

இதனை தொடர்ந்து  இரண்டு நாட்களாக சவக்கிடங்கிலேயே ராஜ் மோகனின் உடல் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் அறிந்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவன், ராஜ் மோகனின் உடலை அரசு சார்பில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். அதன் பின்னர் நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த செய்தி மலையாள நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here