உலக கோப்பையில் சதம் விளாசிய ஹிட் மேன்…, ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தல்…, முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பையில் சதம் விளாசிய ஹிட் மேன்..., ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தல்..., முழு விவரம் உள்ளே!!
உலக கோப்பையில் சதம் விளாசிய ஹிட் மேன்..., ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்து அசத்தல்..., முழு விவரம் உள்ளே!!
ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் இந்தியாவில் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியானது 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்களை குவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 84 பந்தில் 16 பவுண்டரிஸ் 5 சிக்ஸர்கள் உள்ளிட்ட 131 ரன்கள் அடித்து அசத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரை தொடர்ந்து, இஷான் கிஷன் 47, விராட் கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் அடிக்க இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியில், ரோஹித் சர்மா சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தகாரராகி உள்ளார்.
அதாவது,

  • உலக கோப்பையில் குறைந்த இன்னிங்ஸில் (19) 1000 ரன்களை (1019) கடந்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
  • சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்களை (554) விளாசி ரோஹித் சர்மா முதலிடத்தை எட்டி உள்ளார். வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
  • ஒருநாள் அரங்கில் தொடக்க வீரராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை ரோஹித் சர்மா (29) பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் 45 சதங்களுடன் உள்ளார்.
  • உலக கோப்பை வரலாற்றில் ரோஹித் சர்மா அதிக சதம் (7) அடித்த முதல் இந்திய வீரரானார். சச்சின் 6 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here