உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எது?? வெளியான புள்ளி பட்டியல் இதோ!!

0
உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எது?? வெளியான புள்ளி பட்டியல் இதோ!!
உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எது?? வெளியான புள்ளி பட்டியல் இதோ!!

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரில், பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 7 போட்டிகளையும் வென்று அசத்தி உள்ள இந்திய அணியானது 14 புள்ளிகளுடன் (+2.102 ரன் ரேட்) முதலிடத்தில் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் 3, 4 மற்றும் 5 வது இடத்திலும் உள்ளன. மேலும், பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் 6 வது இடத்தையும், இலங்கை மற்றும் நெதர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் 7 மற்றும் 8 வது இடத்தையும், தலா 2 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் கடைசி 2 இடத்தையும் பிடித்துள்ளனர். லீக் சுற்றுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here