தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று சென்னை, மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதை தொடர்ந்து தற்போது வானிலை மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.