சர்வதேச அளவில் சாதனை அள்ளி குவிக்கும் விராட் கோலி…, முழு பட்டியல் இதோ!!

0
சர்வதேச அளவில் சாதனை அள்ளி குவிக்கும் விராட் கோலி..., முழு பட்டியல் இதோ!!
சர்வதேச அளவில் சாதனை அள்ளி குவிக்கும் விராட் கோலி..., முழு பட்டியல் இதோ!!

ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் இந்தியாவில் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசலாந்து அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடந்தது. இதில், இந்திய அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டியில், இந்தியாவின் விராட் கோலி பல சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

விராட் கோலியின் சாதனை பட்டியல்:

  • உலக கோப்பை 2023 நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில், 113 பந்துகளில் 9 பவுண்டரிஸ், 2 சிக்ஸர் என 117 ரன்களை (சதம்) குவித்துள்ளார்.
  • இதன் மூலம், சர்வதேச அளவிலான ஒருநாள் அரங்கில் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்து, ஒருநாள் வடிவில் அதிக சதம் (49) அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (13704) பின்னுக்கு தள்ளி 3 வது இடத்தை விராட் கோலி 13794 ரன்களுடன் பிடித்துள்ளார்.
  • சர்வதேச அளவில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 80 சதங்கள் அடித்து 2வது இடத்தில் விராட் கோலி உள்ளார். முதலிடத்தில் சச்சின் 100 சதங்களுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

TNTET தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற இது ரொம்ப முக்கியம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here