#NZvsAUS டி20 போட்டி – 208 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா!!

0

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி தங்களது மூன்றாவது டி 20 போட்டிகளை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்களை குவித்துள்ளது.

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா:

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது டி 20 போட்டிகளை விளையாடி வருகிறது. இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் வேட் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பும்ராஹ்விற்கு மலையாள நடிகையுடன் திருமணமா?? குவியும் வாழ்த்துக்கள்!!!

அதன் பின்பு ஜோடி சேர்ந்த பின்ச் மற்றும் பிலிப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தொடர்ந்து மக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 208 ரன்களை குவித்து தனது 4 விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பின்ச் 69, பிலிப் 43 மற்றும் மக்ஸ்வெல் 70 ரன்களை குவித்தனர். தற்போது 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here