மூர்த்திக்கு எதிராக சூப்பர் மார்க்கெட் கட்டும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

0

மூர்த்தி டிபார்ட்மென்டல் ஸ்டோர் கட்டுவது தெரிந்த ஜனார்த்தனன், மீனா பெயரில் அவசரமாக சூப்பர் மார்க்கெட் கட்டுகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் மூர்த்தி குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் வீட்டு பத்திரத்தை பேங்கில் வைத்து லோன் வாங்கலாம் என மூர்த்தியும் கதிரும் கூறுகின்றனர். லோன் கட்டுவதில் சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்த லட்சுமியை கதிரும், மூர்த்தியும் சமாதானப்படுத்துகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வழியாக வீட்டை வைத்து லோன் வாங்குவதற்கு ஒப்புக்கொள்கிறார் லட்சுமி. மூர்த்தி புதிய ஸ்டோர் கட்டப்போகும் இடத்தை எப்படியாவது வாங்கவேண்டும் என திட்டம் தீட்டுகிறார் ஜனார்த்தனன். இன்னும் பத்து நாட்களில் சூப்பர் மார்க்கெட் கட்டி, அதற்கு மீனா பெயரை வைக்க வேண்டும் என கூறுகிறார் ஜனார்த்தனன்.

மருத்துவமனைக்கு செல்லும் தனம் ஸ்கேன் எடுக்க செல்கிறார். ஸ்கேனில் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர் கூறி, சில அறிவுரைகள் சொல்லி அனுப்புகிறார். வரும் வழியில் தனத்தை அவளது அம்மா வீட்டில் விட்டு, வீட்டிற்கு வருகிறார் மூர்த்தி. மீனாவை பார்க்க வீட்டிற்கு வரும் ஜனார்த்தனன், முல்லையிடம் தாம்பூல தட்டை எடுத்துவரும் படி கூறுகிறார்.

‘உன்னையும் கண்ணம்மாவையும் நான் சேத்து வச்சு காட்றேன்’ – பாரதியிடம் சவால் விடும் சௌந்தர்யா!!

தான் கட்டப்போகும் சூப்பர் மார்க்கெட்டின் திறப்புவிழா பத்திரிகையை கொடுத்து விட்டு கிளம்புகிறார் ஜனார்த்தனன். நாம கடை கட்டப்போறோம்னு தெரிஞ்சு தான் அவர் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்க போகிறார் என லட்சுமி கூறுகிறார். அதற்கு மீனா நாம டிபார்ட்மென்டல் ஸ்டோர் கட்டுவது எங்க அப்பாவுக்கு தெரியாது என கூறுகிறார்.

குடோனில் மூட்டை இறக்கிக்கொண்டிருக்கும் கதிரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் மூர்த்தி. அங்கு வரும் ஜீவா பேங்கில் லோன் வாங்குவதற்கு, பேங்கில் பேசிவிட்டேன், அவர்களும் ஒப்புக்கொண்டார்கள் என கூறுகிறார்.  ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கும் விஷயத்தை மூர்த்தி கூற, எப்படி ஒரே இடத்தில் இரண்டு கடை இருக்க முடியும் என கதிரும் ஜீவாவும் யோசிக்கிறார்கள்.  இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here