பும்ராஹ்விற்கு மலையாள நடிகையுடன் திருமணமா?? குவியும் வாழ்த்துக்கள்!!!

0

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ்விற்கு திருமணம் என்றும் மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணப்பெண் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பும்ராஹ்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்குமான கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி 20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிலவியுள்ளது. அந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ் இடம்பெறவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. பும்ராஹ் சில நாட்களாகவே தனக்கு நீண்ட நாள் ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தாராம். இதுகுறித்து அவர் பிசிசிஐவிற்கு கடிதமும் எழுதியுள்ளார். தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வுக்கு காரணம் இவரது திருமணம் தான் என்று கூறப்படுகிறது. இந்த ஓய்வு நேரத்தில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசுஆலோசனை!!

தற்போது இவர் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கும் நடிகை அனுபமாவிற்கும் இடையே காதல் நிலவி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதற்கு இந்த இரு தரப்பினரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘HAPPY HOLIDAY TO ME’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் இவர் தான் மணப்பெண் என்று உறுதி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here