பொங்கலன்று SBI போட்டித்தேர்வு., போராட்டத்தில் குதித்த தலைவர்கள்.., எம்.பி. செஞ்சதோ அதுக்கும் மேல!!!

0
பொங்கலன்று SBI போட்டித்தேர்வு., போராட்டத்தில் குதித்த தலைவர்கள்.., எம்.பி. செஞ்சதோ அதுக்கும் மேல!!!
பொங்கலன்று SBI போட்டித்தேர்வு., போராட்டத்தில் குதித்த தலைவர்கள்.., எம்.பி. செஞ்சதோ அதுக்கும் மேல!!!

உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி சரிவடைந்து வருவதால் வேலையில்லா திண்டாட்டம் வலுப்பெற்று வருகிறது. இதனால் தனியார் துறை மற்றும் அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, நேர்காணல் போன்ற தேர்வுகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள 5000க்கும் மேற்பட்ட கிளார்க் காலிப்பணியிடங்களுக்கான மூன்று படி நிலைகளை கொண்ட தேர்வு அறிவிப்பை SBI வெளியிட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து முதல் நிலைத் தேர்வு முடிந்து 2ம் படி நிலைக்கான முதன்மை தேர்வு ஜனவரி 15ம் தேதி நடைபெறும் என அண்மையில் SBI தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி நடைபெறுவதால் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

தமிழக ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!

இதைத் தொடர்ந்து SBI கிளார்க் பணிக்கான முதன்மை தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்களும் SBI அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் SBI பேங்க் மேலாளர் அறையில் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here