தமிழக ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!

0
தமிழக ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!
தமிழக ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!

தமிழகத்தில் ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதற்காக ரூபாய் 2.70 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு போனஸ்:

தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் அரசின் “சி” மற்றும் “டி” பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அவர்களின் பணி காலங்களுக்கு ஏற்ப, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் வெளியிட்டார். அந்த வகையில், தற்போது அரசின் முக்கியத்துறையான ஆவினில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது ஆவினில் பணிபுரியும், 27, 189 ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவதற்கு ரூபாய் 2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் போன்று இவர்களுக்கும், அவர்களின் பணி காலங்களுக்கு ஏற்ப போனஸ் தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முக்கிய அறிவிப்பால் ஆவின் ஊழியர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here