உலக மாற்றுத்திறனாளிகள் தினம்., சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம்!!

0
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்., சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம்!!
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்., சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம்!!

சென்னை இராயபுரத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்த போவதாக சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் கூட சென்னை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் கடல் மணல் பரப்பில் கால் நனைத்து விளையாட மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து கொடுத்தனர். இந்நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது .

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்காக விளையாட்டு போட்டி, கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் இராயபுரத்தில் உள்ள சென்னை உருது தொடக்க பள்ளியில் நாளை (29.11.2022) காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலை நிகழ்ச்சி தமிழக அரசால் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் Power Cut (29.11.2022) – எந்தெந்த பகுதின்னு தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!!

அதே போன்று மாற்றுத்திறனாளிகள் திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்வதால் காவல்துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here