நாவூறும் சுவையில் இறால் வறுவல்.., அதுவும் நெய் மணக்க.., மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0
நாவூறும் சுவையில் இறால் வறுவல்.., அதுவும் நெய் மணக்க.., மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!
நாவூறும் சுவையில் இறால் வறுவல்.., அதுவும் நெய் மணக்க.., மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

சண்டே ஆயிட்டா எல்லார் வீட்டிலும் ஒரே மாறி மட்டன், சிக்கன் தான் செய்வாங்க. பட் இந்த முறை கொஞ்ச டிஃபரெண்டா காரசாரமான இறால் தொக்கு செஞ்சு வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி அந்த ரெசிபி பண்றதுனு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. இறால் _1/2 kg

2. வெங்காயம் – 2

3. தக்காளி – 2

4. இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன்.

‌ 5.கருவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு.

6. நல்லெண்ணெய் – 50 கிராம்.

7. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.

8. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்.

9. மல்லித்தூள் – 2 டீஸ்பூன்.

10. உப்பு – தேவையான அளவு.

11. நெய் – தேவையான அளவு.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

செய்முறை:

காரசாரமான இறால் தொக்கு செய்வதற்கு ஒரு வாணலியியை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும், சட்டி சூடானவுடன் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன், நறுக்கி வைத்துள்ள வெங்காயத் துண்டுகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்கவும். பிறகு இதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை மற்றும் தேவையான அளவு நெய் சேர்த்து இறக்கினால் காரசாரமான இறால் தொக்கு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here