தமிழக ரேஷன் கடைகளில் இதற்கு தட்டுப்பாடு?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக ரேஷன் கடைகளில் இதற்கு தட்டுப்பாடு?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்ததால் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை மிகவும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் இந்த அரிசியின் விலை ஏற்றத்தால் நியாய விலை கடைகளில் மாதம் தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அரிசியின் விலை உயர்வால் தமிழக ரேஷன் கடைகளில் தற்போது வரை எந்த அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை. மேலும் மக்களுக்கு வழக்கம் போல் அரிசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அரிசி தட்டுப்பாடை நினைத்து மக்கள் யாரும் கலக்கமடைய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here