தமிழக மருத்துவமனைகளில் இதற்கு வாய்ப்பே இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!!

0
தமிழக மருத்துவமனைகளில் இதற்கு வாய்ப்பே இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!!
தமிழக மருத்துவமனைகளில் இதற்கு வாய்ப்பே இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!!

அரசு மருத்துவமனையின் மருந்து கிடங்கில் தேவையான மருந்து இல்லை என புகார்கள் எழுப்பப்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இதனால் இதையறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் எழுந்த போதெல்லாம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவு படுத்திக்கொண்டு தான் உள்ளேன். மேலும் தேவையான மருந்துகள் உள்ளனவா, காலாவதியான மருந்துகள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.

நீலகிரியில் வீரியமெடுக்கும் புது வைரஸ்.., அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!!

பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தும் வருகிறோம். இது தவிர கடந்த 2 நாளுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவில்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்து மற்றும் அதன் கையிருப்பில் உள்ள மருந்து பற்றி மருத்துவமனைகளில் விசாரித்து ஆய்வு பணி மட்டுமின்றி களப்பணியும் செய்யப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும், யாரேனும் சோதனை செய்ய முன்வந்தால் தாராளமாக அனுமதி தரப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களிடம் ஏதேனும் குறைகள் இருந்தால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் எனவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here