20 லட்சம் பேருக்கு வேலை., பெண்களுக்கு இலவச கல்வி., விவசாயத்திற்கு 10,000 கோடி நிதி – அரசின் புதிய திட்டம்!!

0
20 லட்சம் பேருக்கு வேலை., பெண்களுக்கு இலவச கல்வி., விவசாயத்திற்கு 10,000 கோடி நிதி - அரசின் புதிய திட்டம்!!

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக அரசு தேர்தல் குறித்த வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை:

குஜராத் மாநிலத்தில் பாஜக தலைமையிலான, முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது இந்த மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பாக, தேர்தல் வாக்குறுதி வெளியாகியுள்ளது.

யூத் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப்.., தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய இளம் வீரர்கள்!!

இந்த அறிக்கையில், குஜராத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, LKG முதல் PG வரை பெண்களுக்கு இலவச கல்வி, 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலை, விவசாய உள்கட்டமைப்புக்கு ரூபாய் 10,000 கோடி நிதி, குஜராத் மாநிலம் மூத்த பெண் குடி மக்களுக்கு பேருந்தில் இலவச பயணம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தொடர்ந்து, பாசன வசதிக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி, தீவிரவாத மற்றும் பொது சொத்துக்களுக்கு எதிராக சட்டம் இயற்றுதல் போன்ற பல்வேறு, அறிவிப்புகளை கட்சி தலைவர் ஜே பி நட்டா , மாநில முதல்வர் பூபேந்திர பட்டியல் மற்றும் மாநில தலைவர் சி ஆர் பாட்டில் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த அறிவிப்பு குஜராத் மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here