45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இல்லை  – பொதுமக்கள் ஏமாற்றம்!!!

0

டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதால், திங்கள்கிழமைக்குப் பிறகு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்  பிரிவில் உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் இல்லை என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஞாயிற்றுக்கிழமை காலை வரை, டெல்லியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 25,120 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளும் மற்றும் 1.9 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போதய நிலவரப்படி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்னும் ஒரு வாரகாலத்திற்கு உள்ளன.கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாம் டோஸை 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு செலுத்திக்கொள்ளலாம்.

 

தற்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி கூறியுள்ளதாவது, “திங்கட்கிழமைக்குப் பிறகு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது  டோஸ் கிடைக்காது என்பது கவலைக்குரிய விஷயம். இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு டெல்லியில் கோவாக்சின் கிடைக்குமாறு மத்திய அரசிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியின் மொத்த மக்கள் தொகை சுமார் 2 கோடி ஆகும், இதில் சுமார் 50 லட்சம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய் போன்றவற்றால் தடுப்பூசி பெற அனுமதிக்கப்படாத நபர்கள் ஆவர். மிதமுள்ளவர்களில் இதுவரை, குறைந்தபட்சம் 50.85 லட்சம் பேர்  தடுப்பூசியின் முதலாம் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here