WTC புள்ளி பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து.. வெளியான புள்ளிவிவரம்!!

0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது.

இந்நிலையில் இத்தொடரின் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது. இதில் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திலும், இந்திய அணி 3வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 4வது, 5வது, 6வது இடங்களில் உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here