இந்திய அணிக்கு புதிய ஜெர்சி., மாஸ் அப்டேட்டை வெளியிட்ட BCCI., ராயல் ப்ளூவில் களமிறங்கும் வீரர்கள்!!

0
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி., மாஸ் அப்டேட்டை வெளியிட்ட BCCI., ராயல் ப்ளூவில் களமிறங்கும் வீரர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணி T20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டது.

புதிய ஜெர்சி

கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக ஆசிய கோப்பை முடிந்த சில நாட்களில் T20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அணியக் கூடிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  புதிய ஜெர்சி வழக்கமான நீல நிறத்தில் இருந்தாலும் வித்தியாசமான டிசைனில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை அணிந்து கொண்டு தான் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் ஆட இருக்கின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் புதிய ப்ளூ ஜெர்சியை அணிந்து செம கெத்தாக இருக்கும் புகைப்படத்தை BCCI வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here