ஒரே நாளில் ரூ.25 கோடி – ஆட்டோ டிரைவருக்கு அடித்த பம்பர் பரிசு! மாநில அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!!

0
ஒரே நாளில் ரூ.25 கோடி - ஆட்டோ டிரைவருக்கு அடித்த பம்பர் பரிசு! மாநில அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!!
ஒரே நாளில் ரூ.25 கோடி - ஆட்டோ டிரைவருக்கு அடித்த பம்பர் பரிசு! மாநில அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!!

கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு, லாட்டரி டிக்கெட் ஜாக்பாட் பரிசாக ரூ. 25 கோடி கிடைத்துள்ளதாக மாநில லாட்டரி துறை அறிவித்துள்ளது.

லாட்டரி துறை அறிவிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில், 32 வயதான ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் அனூப் என்பவர், அப்பகுதியில் உள்ள பகவதி ஏஜென்சி ஒன்றில் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி டிக்கெட் முடிவுகளை கேரளா லாட்டரி துறை அறிவித்தது.

நேற்று மதியம் 2 மணி அளவில் வெளியான இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் என்பவருக்கு 25 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இவர், ரூ.5 லட்சம் வங்கி லோன் பெற்று, வெளிநாட்டில் செஃப் வேலை பார்ப்பதற்காக தயாராகி வந்த நிலையில் இவருக்கு இந்த பம்பர் பரிசு கிடைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோல், டிஜி 270912 என்ற எண் கொண்ட ஒருவருக்கு 2ம் பரிசாக ரூபாய் 5 கோடி கிடைத்துள்ளது. மாநிலத்தில், பலருக்கும் இது போன்ற ஜாக்பாட் பரிசுகள் கிடைத்திருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here